சினிமா

புஷ்பா புருஷன் போலத்தான் விக்கியும்.. நயன்தாராவை விசிட்டிங் கார்டா வச்சிருக்காரு..!

Published

on

புஷ்பா புருஷன் போலத்தான் விக்கியும்.. நயன்தாராவை விசிட்டிங் கார்டா வச்சிருக்காரு..!

‘ஐயா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்தான் நயன்தாரா. இவர் சுமார் 20 வருடங்களாக ஹீரோயினாகவே நடித்து வருகின்றார். சமீபத்தில் இவர் வலைப்பேச்சு டீமை பற்றி தெரிவித்த கருத்து இணையதளத்தில்  சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.2022 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா. அதன் பின்பு வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றுக் கொண்டார். மேலும் தான் செல்லும் பட சூட்டிங்கிற்கு  எல்லாம் தனது குடும்பத்தையும் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் நயன்தாரா.விக்னேஷ் சிவன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் உள்ள  பிரபல அமைச்சரிடம், அரச ஹோட்டல் ஒன்றை தனக்கு விலைக்கு  கொடுக்கும் படி கேட்டு இருந்தார். ஆனாலும் அரச ஹோட்டல்களை விலைக்கு  கொடுக்க மாட்டார்கள் என்று கூறியபோதும், ஒப்பந்தத்தின் அடிப்படையில் சரி வாடகைக்கு விடுவீர்களா என்று கேட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கு உள்ளானது.d_i_aஇந்த நிலையில், விக்னேஷ் சிவன் பற்றியும் நடிகை நயன்தாரா கொடுத்த பேட்டி பற்றியும் வலைப்பேச்சு பிஸ்மி  தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி  அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நயன்தாரா நேரடியாகவே வலைப்பேச்சு சேனலை தாக்கி பேசி உள்ளார். நாம் முன்னணி நடிகையாக சொல்கின்ற பொய் எல்லாவற்றையும் இந்த உலகம் நம்பி விடும் என்ற முட்டாள் தனமான நம்பிக்கையில் அவர் இருந்து வருகின்றார்.நயன்தாராவுக்கு அவருடைய வாழ்க்கையில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் எங்களுக்கும் தெரியும் என்று அவருக்கு தெரியும். அதை வெளியில் சொல்லி விடுவார்களோ என்ற பயத்தில் தான் இப்படி பேட்டி கொடுத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் விக்னேஷ் சிவன், அரச ஹோட்டலை விலைக்கு கேட்டது எல்லாம் எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.அரச சம்பந்தமான எந்த ஒரு நிறுவனத்தையும் விலைக்கு கொடுக்க மாட்டார்கள் என்பது கூட அவருக்கு தெரியாதா? நயன்தாரா பல பிசினஸ் செய்து வருகின்றார். நயன்தாராவுக்கு புருஷனாக உள்ள விக்னேஷ் சிவனும் நயன்தாராவின் பணத்தை எதிலாவது முதலீடு செய்ய வேண்டும் என்று இவ்வாறான வேலைகளை செய்கின்றார்.விக்னேஷ் சிவனின் அடையாளமே நயன்தாராவின் புருஷன் என்பது தான். இது புஷ்பா புருஷன் போல தான் உள்ளது. அதுபோலவே விக்னேஷ் சிவனும் நயன்தாராவின் புருஷன் என்று அடையாளத்தை விசிட்டிங் கார்ட் ஆக  பயன்படுத்தி வருகின்றார் என்று பிஸ்மி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version