சினிமா

மஞ்சு வாரியர் ஏன் எப்போதும் வாரியராவே இருக்கீங்க..? முத்துக்குமரன் கிடுக்குப்புடி கேள்வி

Published

on

மஞ்சு வாரியர் ஏன் எப்போதும் வாரியராவே இருக்கீங்க..? முத்துக்குமரன் கிடுக்குப்புடி கேள்வி

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் தான் விடுதலை. இந்தப் படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அது மட்டும் இல்லாமல் சூரியின் சினிமா கேரியரில் இந்த படம் மிகப்பெரிய திருப்பு முனையாக காணப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் வெளியாகும் என படக் குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். அதில் மலையாள நடிகையான மஞ்சு வாரியர் விஜய் சேதுபதியுடன் முக்கிய காட்சிகளில் இணைந்து நடித்துள்ளார்.d_i_aஇவருடைய நடிப்பும் கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்து உள்ளதோடு இந்த படத்தில் அனுராக் காஷ்யப் மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். இந்த நிலையில், இன்றைய தினம் விடுதலை 2 படக் குழுவினர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் தமது படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்து கொண்டுள்ளார்கள். இதன் போது மஞ்சு வாரியரிடம் முத்துக் குமரன் கேள்வியொன்றை எழுப்பியுள்ளார்.அதாவது, அசுரன், துணிவு, விடுதலை 2 ஆகிய படங்களில் ஏன் மஞ்சு வாரியர் வாரியராகவே இருக்கீங்க.. என்று கேட்டதற்கு, அதை நான் லக்கி என்றே சொல்லுவேன். எனக்காக அப்படிப்பட்ட கதாபாத்திரங்களை எழுதுவதற்கு இயங்குநர்களுக்கு தோன்றி இருக்கு என்றால் அதற்கு காரணம் நான் அதற்கு முதல் நடித்த படங்கள் தான் என ரொம்ப கூலாக பதில் சொல்லி உள்ளார் மஞ்சு வாரியர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version