இலங்கை

மின்சார கட்டணத்தில் மாற்றம்: ஒரு அலகு 31 ரூபாவிலிருந்து 24 ரூபாவாக குறைக்கப்படும்!

Published

on

மின்சார கட்டணத்தில் மாற்றம்: ஒரு அலகு 31 ரூபாவிலிருந்து 24 ரூபாவாக குறைக்கப்படும்!

மின்சார அலகு ஒன்றுக்கு தற்போது அறவிடப்படும் 31 ரூபா, 24 ரூபாவாக குறைக்கப்படுமென இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.

ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் இதைவிட அதிகமாக செலவாகுமென சுட்டிக்காட்டிய அவர், இதனை இலாபமுள்ளதாக்கும் முயற்சிக்கு சிறிது காலம் செல்லும் எனவும்  தெரிவித்தார்.

Advertisement

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (12) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே   கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய இதனை குறிப்பிட்டார். இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளிக்கும் வகையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, தொடர்ந்து கருத்து தெரிவித்த கலாநிதிதிலக் சியம்பலாபிட்டி,

கடந்த இரு வாரங்களாக பெய்த மழையால், நீர்மின் உற்பத்தி மூலமான மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. எதிர்வரும் காலங்களில், மின் உற்பத்தியில் செலவைக் குறைத்து, இலாபமீட்டும் துறையாக முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதுடன், பொதுமக்களுக்கு குறைந்த விலைக்கு மின்சாரத்தை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

Advertisement

மகாவலி ஊடாக நீர் தக்கவைத்துக் கொள்ளப்படவுள்ளது. அதிகளவு நீர் இருக்கும்போது எரிபொருள் ஆலைகளை பயன்படுத்த வேண்டியதில்லை.

ஆனால், மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என சிலர் கேட்கின்றனர். மின்சாரம் தயாரிக்க அதிக அளவு செலவிடப்படுவதே இதற்குக் காரணம்.

மின்சார உற்பத்திற்கான செலவுகளை குறைக்க முடிந்தால், மின் கட்டணம் குறையும். அதன்படி, டீசலுக்குப் பதிலாக வேறு எரிபொருட்களைப் பயன்படுத்த முயற்சித்து வருகிறோம். இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

Advertisement

அதன்படி, 2028 ஆம் ஆண்டு நாட்டுக்கு இயற்கை எரிவாயு கொண்டுவரப்படும். அதற்கான மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதனூடாக செலவினங்களை 50 சதவீதம் குறைக்க முடியும். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மின் கட்டணத்தை குறைக்க முயற்சி செய்துவருகிறோம். தற்போது ஒரு மின் அலகுக்கு 31.00 ரூபா அறவிடப்படுகிறது. ஆனால், அதற்கு செலவு அதிகம்.  இதனை 24 ரூபாவாக குறைக்க முயற்சிக்கின்றோம்.

காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் நிலையங்கள் தனியாருக்கு சொந்தமானது. அவர்களின் மின்சாரத்தை மின்சார சபை கொள்வனவு செய்யவேண்டும். மின்சார கட்டண திருத்தம் தொடர்பான விடயங்கள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும் இந்த இரண்டு மாதங்களில்  மின்கட்டண விலை அதிகரிக்கப்படமாட்டாது. ஜனவரி 15 ஆம் திகதி முதல் 18 திகதிகளில், கட்டண முறை குறித்து பொது பயன்பாட்டு ஆணைக்குழு தனது நிலைப்பாட்டை அறிவிக்கும்  என அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version