இலங்கை

விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை!

Published

on

விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை!

அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரத்தினை கிளிநொச்சி விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்காக நேற்று (12) கையளிக்கப்பட்ட 55,000 மெற்றிக்தொன் MOP உரம் (எம், ஓ.பி உரம்) கிளிநொச்சி விவசாயிகளுக்கும் வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

Advertisement

குறித்த உரங்கள் பூநகரி, கிளிநொச்சி, கண்டாவளை கமநல சேவை நிலையங்களுக்கு இன்று (13) கொண்டு வரப்பட்டன. 

குறித்த உரத்தினை விரைவாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version