வணிகம்

வீட்டுக் கடன் வாங்கியுள்ளீர்களா? உங்களுக்கு நல்ல செய்தி: EMI ரூ.3190 வரை குறைக்கப்படும்!

Published

on

வீட்டுக் கடன் வாங்கியுள்ளீர்களா? உங்களுக்கு நல்ல செய்தி: EMI ரூ.3190 வரை குறைக்கப்படும்!

சொந்த வீடு வாங்குவது என்பது ஒருவரின் வாழ்நாள் கனவு. முக்கியமாக நடுத்தர குடும்பத்தினருக்கு இது ஒரு பெரிய கனவாக உள்ளது. கடந்த காலத்தை விட, இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது, இதனால் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெற்று, சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. அடுத்த ஆண்டு வீட்டுக் கடன் பெற விரும்புவோருக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் வங்கிகளும் கடனுக்கு வழங்கும் வட்டி விகிதத்தை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

ரிசர்வ் வங்கி 2025-26 யூனியன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன் திட்டமிடப்பட்ட பிப்ரவரி மானிட்டரி பாலிசி கூட்டத்தில் ரெப்போ ரேட் எனப்படும் முக்கிய வட்டி விகிதத்தை குறைந்தபட்சம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் நம்புகின்றனர். RBI ஆனது 2025 ஆம் ஆண்டில் பிப்ரவரி, ஏப்ரல், ஜூன், ஆகஸ்ட், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆறு நிதிக் கொள்கைக் குழு (MPC) கூட்டங்களை நடத்தவுள்ளது. இந்த கூட்டங்களில் குறைந்தபட்சம் நான்கு கூட்டங்களில் ரெப்போ விகிதத்தை மத்திய வங்கி குறைக்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர், அந்த நான்கு கூட்டங்களில் ஒவ்வொரு முறையும் 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து, மொத்தமாக 1.00% வரை குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டில் RBI ஆல் 1% ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டால், அது கடன் வாங்குபவர்களுக்கு கணிசமான நிவாரணத்தை வழங்குகிறது. கடந்த 6 ஆம் தேதி நடந்த சமீபத்திய மானிட்டரி பாலிசியில், ரிசர்வ் வங்கி அதன் பெஞ்ச்மார்க் விகிதத்தை 6.5% ஆக அப்படியே வைத்திருக்க முடிவு செய்தது. தொடர்ந்து 11வது முறையாக RBI அதன் வட்டி விகிதத்தை மாற்றவில்லை.

Advertisement

ரிசர்வ் வங்கி தனது டிசம்பர் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்தாலும், 2025 ஆம் ஆண்டு ரெப்போ வட்டி விகிதக் குறைப்பு சாத்தியமாகும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். HSBC ஆராய்ச்சியின் படி, ரிசர்வ் வங்கி பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் RBI சுமார் 25 அடிப்படை புள்ளிகள் வீதம் 2% வட்டி விகிதக் குறிப்புகளை செயல்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இது ரெப்போ விகிதத்தை 6 சதவீதம் குறைக்கும்.

ஜப்பானிய முதலீட்டு வங்கியான நோமுரா, வரவிருக்கும் புத்தாண்டில் ரிசர்வ் வங்கி படிப்படியாக வட்டி விகிதங்களை 100 அடிப்படை புள்ளிகளால் குறைக்கும் போது, ​​வீட்டுக் கடன் வாங்குபவர்களின் EMI செலுத்தும் சுமை கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாட்டில் உள்ள பல வங்கிகள் வீட்டுக் கடனுக்கு சுமார் 9.75 சதவீத வட்டியை வசூலிக்கின்றன.

உதாரணமாக, ஒருவர் 9.25% வட்டி விகிதத்தில் 20 ஆண்டுகளுக்கு ரூ.50 லட்சம் கடன் வாங்கினால், அந்த நபர் மாதம் ரூ.45,793 EMI செலுத்த வேண்டும். இந்நிலையில் வட்டி விகிதம் 1 சதவீதம் குறைந்தால், கடன் வாங்கியவர் செலுத்த வேண்டிய மாதாந்திர EMI ரூ.42,603 ​​ஆக குறைக்கப்படும். இதன் மூலம் அவர்கள் மாதம் ரூ.3190 வரை பணத்தை மிச்சப்படுத்தலாம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version