இலங்கை

14 வயது சிறுமியை விபச்சார தொழிலுக்கு பயன்படுத்திய நபர்

Published

on

14 வயது சிறுமியை விபச்சார தொழிலுக்கு பயன்படுத்திய நபர்

14 வயது சிறுமி ஒருவரை விபச்சாரத்துக்கு பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபருக்கு 30 வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு 45 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

பாதிக்கப்பட்ட சிறுமி தேவாலயம் ஒன்றின் ஊர்வலத்தைக் கண்டுகளிப்பதற்காக சென்றிருந்தபோது சந்தேக நபர் சிறுமியுடன் நட்பாகப் பழகி சிறுமியை ஏமாற்றி, கொழும்பு, மருதானை பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று, அங்கு சிறுமியை பலாத்காரமாக அடைத்துவைத்து, விபச்சார தொழிலுக்குப் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version