உலகம்

19 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜோ பைடன்!

Published

on

19 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜோ பைடன்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் பதவி விலக உள்ள நிலையில் அவர் ஒரே நாளில் சுமார் 1500 பேரின் தண்டனைகளை குறைத்துள்ளதுடன் 19 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறார் என வெள்ளை மாளிகை  அறிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா பரவல் அதிகரித்தபோது வீட்டுக் சிறையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,500 தண்டனை கைதிகளின் தண்டனை குறைக்கப்படுவதுடன் வன்முறையற்ற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 39 நபர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் அதிக நபர்கள்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், செய்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்து, சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதற்காக விருப்பம் தெரிவித்தவர்களுக்கு மன்னிப்புகளும் தண்டனைக் குறைப்புகளும் வழங்கப்படுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார். (ச)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version