இந்தியா
Chembarambakkam Lake | கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்… விநாடிக்கு 4,500 கனஅடி நீர் திறப்பு….
Chembarambakkam Lake | கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்… விநாடிக்கு 4,500 கனஅடி நீர் திறப்பு….
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக முதல் கட்டமாக ஐந்து கண் மதகிலிருந்து இரண்டு மற்றும் நான்கு ஆகிய ஷட்டர்களில் இருந்து ஆயிரம் கன அடி உப நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது அது 4 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அடையாறு ஆற்றங்கரை ஓரம் வசிக்கக்கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருமுடிவாக்கம், சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், திருநீர்மலை, வழுதலம்பேடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கமான புழல் நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து அதிகரித்ததால், பாதுகாப்பு கருதி 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் புழல் ஏரி உபரி நீர் கால்வாயின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 21.2 பூஜ்யம் உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 19.7 இரண்டு அடி நீர் இருப்பு உள்ளது.