இந்தியா
Rasi Palan 2025: கர்ப்பிணிகளே உஷாராக இருக்க வேண்டிய காலம் இது” – துலாம், விருச்சிகம்,தனுசு ராசியினருக்கான ஆண்டு பலன்கள்…
Rasi Palan 2025: கர்ப்பிணிகளே உஷாராக இருக்க வேண்டிய காலம் இது” – துலாம், விருச்சிகம்,தனுசு ராசியினருக்கான ஆண்டு பலன்கள்…
துலாம், விருச்சிகம் ,தனுசு
ராசிக்காரர்களுக்கான 2025 ஆம் ஆண்டு பலன்
2025 ஆம் ஆண்டிற்கான துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய ராசிகளுக்கான பலன்களை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பிரபல ஜோதிட கணிப்பாளர் கணித்துக் கூறியுள்ளார்.
ஆடம்பர பிரியர்களாகவும் அதே சமயம் நடுநிலையாளர்களாகவும் விளங்கும் துலாம் ராசி அன்பர்களே!உங்களுக்கு ஒரு நற்காலம் தொடங்க உள்ளது. புதிய தொழில் தொடங்குவீர்கள் . வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்து தடைகள் நீங்கும். சிலர் இடம் விட்டு இடம் நகர்வீர்கள்.ஜூன் க்கு மேல் குழந்தை பாக்கியம் உண்டாகும். வண்டி ,வாகனம் மணயோகங்கள் ஏற்படும் .ஜனவரி முதல் ஏப்ரல் வரை சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்காக சிலர் கடன் பட நேரிடும். ஆனால் பிள்ளைகளுக்கு முன்னேற்றமான காலம் . கல்வி சிறக்கும் .வேலை கிடைக்கும். வாழ்க்கை துணைவர்களால் இலாபம் உண்டு.
கர்ப்ப மகளிர் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும் . ஆண்களுக்கு சிறுநீரகம் பிரச்சனைகள் ஏற்படும். சிலருக்கு ஆபரேஷன் நடக்கும். ஆண்டின் கடைசி நாள் மாதங்கள் மாமன் வகையறாக்கள் வாகனங்களில் கவனமாக இருக்க வேண்டும் .ஜூன் மாதத்திற்கு பிறகு தந்தைக்கு பண வரவு உண்டு. தாய் வழியிலும் ஆதாயம் உண்டே.வாழ்க்கைத் துணை வரும் உறவுகளில் சில மன வருத்தங்கள் ஏற்படும். மே மாதம் வரை புதிய ஒப்பந்தங்களோ முதலீடுகளும் செய்ய வேண்டாம் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு நன்மை அடைய வேண்டுகிறேன்.
வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசி எதிரிகளை வாய் அடைக்கச் செய்யும், வல்லமை படைத்த விருச்சிக ராசி அன்பர்களே.!
வாழ்வில் முன்னேற்ற பாதையில் செல்லும் நேரம் இது .எதிர்பாராத வாய்ப்புகள் உங்களை நாடிவரும். தொழில் துறையில் மேன்மை அடையும். குறிப்பாக ஆண்டின் கடைசி நான்கு மாதங்கள் உங்கள் உயர்வுக்கு ஒரு பாதை திறக்கும் .சகோதரர் வகையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். ஜூன், ஜூலையில் மட்டும் உங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். ஆன்மீக செலவுகள் ஏற்படும். மனை பூமியில் சில பிரச்சனைகள் தோன்றும் ஏப்ரல் வரை சுமாராக இருந்த பிள்ளைகளின் கல்வி வேலை வாய்ப்புகள் மே மாதத்திற்கு பிறகு சிறப்படையும்.
வேலை தேடிக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு அந்த வாய்ப்பு பிரகாசமாய் இருக்கும். பிள்ளைகளுக்கு திருமணம் கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பேரு உண்டாகும் .நீண்ட நாள் திருமண தடை உள்ளவர்களுக்கு தடை நீங்கும் .தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. தந்தைக்கு வாகனங்களால் மருத்துவச் செலவு உண்டாகும். தாயினால் ஆதாயங்கள் உண்டு. என்றாலும் தாய் பண விஷயத்தில் பகைமையை சந்திப்பார். மருத்துவ சார்ந்த தொழில்களில் உள்ளோர்க்கு இக்காலம் நற்காலமாகும். மேலும் நன்மைகள் பெருக முருகன் ஆலயங்களுக்கும் சென்று வழிபடவும்.
நேர்மையுடன் செயல்பட்டு பேரும் புகழும் பெற வேண்டும் என்று ஆர்வமுடைய தனுசு ராசி அன்பர்களே!ஆண்டின் தொடக்கத்தில் அதாவது முதல் நான்கு மாதங்கள் தாங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். உடல்நலத்தை முன்னிட்டு கடன் வாங்க நேரிடும். கடனை அடைப்பதற்கு கடன் வாங்க நேரிடும்.
சிலருக்கு வழக்குகளை சந்திக்க நேரிடும். தாயாரின் உடல் நிலையிலும் கவனம் செலுத்த வேண்டி வரும். இந்த சூழ்நிலையிலும் சிலருக்கு மண வாழ்க்கை அமையும்.ஆண்டின் பிற்பகுதியில் எதிர்பாராத பண வரவுகள் ஏற்படும். குழந்தைகள் கல்வி ,வேலையில் முன்னேற்றம் ஏற்படும் .அக்டோபருக்கு பிறகு இடம் மனைகளில் உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வீடு கட்டக்கூடிய யோகங்கள் உண்டு.
சிலருக்கு தாய் வழி சொத்துகளில் ஆதாயம் உண்டு.தாய்க்கு கால்களில் பிரச்சனை ஏற்படும் ஏப்ரல் வரை வாழ்க்கைத்துணை நலம். சில சங்கடங்களில் சந்தித்தாலும் மே மாதத்திற்கு பிறகு நிலைமை சரியாகி வாழ்வு மேன்மை அடையும்.கர்ப்பிணி பெண்கள் மே வரை கவனமுடன் இருக்க வேண்டும். குழந்தைகளின் முன்னேற்றத்தில் சற்று தடை ஏற்படும். ஏப்ரல் வரை தந்தையின் உடல்நலம் கொஞ்சம் பாதிப்படையும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை மாமாவின் வகையில் மன கசப்புகள் சிலருக்கு வழக்குகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆசிரியர்களும் நீதித்துறை உள்ளவர்களும் பெரும் நன்மையை அடைய வாய்ப்புகள் அதிகம்.மேலும் நன்மைகள் பெருக சிவ ஆலயங்களுக்குச் சென்று அங்குள்ள தட்சணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு செய்யவும்.