இந்தியா
Rasi Palan 2025: “மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களே” – உங்களுக்கு 2025 இப்படித்தான் இருக்க போகுது…
Rasi Palan 2025: “மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களே” – உங்களுக்கு 2025 இப்படித்தான் இருக்க போகுது…
மகரம், கும்பம், மீனம்
ராசிக்காரர்களுக்கான 2025 ஆம் ஆண்டு பலன்
மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களே உங்களுக்கு 2025 இப்படித்தான் இருக்கும்…
மகரம் ,கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் 2025 ஆம் ஆண்டிற்கான பலன்களை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சுமார் 50 வருடங்களாக ஜோதிட கணிப்பில் ஈடுபட்டு வரும் மாரிக்கண்ணன் கணித்து கூறியுள்ளார்.
கடும் உழைப்பினை மட்டும் நம்பி வாழ்வில் முன்னேற துடிக்கும் மகர ராசி அன்பர்களே !ஏழரை சனியின் தாக்கம் இன்னும் குறையவில்லை. என்றாலும் ஜூனுக்கு பிறகு பாதிப்புகள் பெருமளவில் குறையும் .உடல் நலத்திற்கு சிறு செலவுகள் செய்ய நேரிடும் .சில வாய்ப்புகள் வந்து கதவை தட்டும், நிதானமாக செயல்பட்டு அகலக்கால் வைக்காமல் முதலீடு செய்து முன்னேறுங்கள். உங்கள் கவலைகளை உங்கள் குழந்தைகள் தீர்த்து வைப்பார்கள். அவர்களுக்கு திருமண வாழ்வு கூடி வரும். பொறியியல் படிப்பு படித்தவர்களுக்கு பொறியியல் துறையில் உள்ளவர்களுக்கும், கம்ப்யூட்டர் துறையில் உள்ளவர்களுக்கும், மேன்மை அடையும் காலம். மே மாதத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கை துணை பேச்சிலும் வெளி வட்டார தொடர்புகளிலும் வாகனங்கள் ஓட்டுவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சிலர் குடும்பத்தை பிரிந்து வெளியூர் வெளிநாடு செல்ல நேரிடும்.தந்தையை பொறுத்தவரை ஜாதகருக்கும் தந்தைக்கும் இடையில் ஒரு பிரிவு ஏற்படும். தந்தைக்கு ஆபரேஷன்ஸ் சிறு விபத்துகள் நடக்க வாய்ப்புண்டு. மாமாவின் வகையில் வருட ஆரம்பத்தில் பதவி உயர்வுகளும்,தொழிலில் லாபமும் கிடைக்கும். மத்தியில் உடல் நலம் சிறிது பாதிக்கும். ஜாதகர் யாருக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது .வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் .கோபத்தை நீக்கி பேச வேண்டும். மணல் ,செங்கல் இரும்பு உணவு தொழில் உள்ளவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.ஆஞ்சநேயர் வழிபாடும், பெருமாள் வழிபாடும் ,சனீஸ்வரர் வழிபாடும் மேலும் நன்மை தரும்.
உழைப்பே உயர்வு தரும் என்று மதிநுட்பத்தோடு செயல்பட்டு வாழ்வில் முன்னேற்றத் துடிக்கும் கும்ப ராசி அன்பர்களே! தாங்கள் ஜென்ம சனியின் பிடியில் உள்ளதால் தான் ஏறினால் முழம் வழுக்கும் .என்ற பழமொழி படி உழைத்தாலும் மேலே வர முடியவில்லை. கவலைப்படாதீர்கள் உங்களுக்கு இந்த காலம் நல்லது கெட்டதை உணர்ந்தும் .ஆசிரியராக செயல்பட்டு பின்னணியில் உங்களை நிலை நிறுத்தும். ஜூன் 2025க்கு பிறகு தங்கள் கவலை சற்று குறையும். சிறு லாபங்கள் கிடைக்கும்.அக்டோபர் 2025 முதல் டிசம்பர் வரை சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உடல்நலம் ,கடன், சில வழக்குகள், மனைவிடம் கருத்து வேறுபாடு, பிள்ளைகளால் தொல்லை போன்றவைகளால் மனம் சஞ்சலம் அடையும்.
பொறுமை மிகவும் தேவை. சொல்லாடலில் கவனம் தேவை. வாழ்க்கை துணைவரிடம் வாக்குவாதம் வேண்டாம்.
தனிப்பட்ட முறையில் சில ஆதாயங்களை பெறுவார்கள். பெற்றோர்கள் கை கொடுத்து உதவினாலும் குறிப்பாக தந்தையின் உடல் நிலையில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை அக்கறை செலுத்த வேண்டும்.மாமாவின் வர்க்கத்தினர் ஆண்டு மத்தியில் நன்மை அடைவார். ஜனவரி முதல் ஏப்ரல் வரை சிறு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தொழிலில் அதிக முதலீடு வேண்டாம். பார்ட்னர்ஷிப் வேண்டாம் .சிலருக்கு சில வாய்ப்புகள் நடைபெறும் .உதவி செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள் கடைசி நேரத்தில் கைவிட்டு விடுவார்கள். அளவோடு நன்மை பெறுவார்கள். பைரவர் ,ஆஞ்சநேயர் ,சிங்க பெருமாள் ஆகிய தெய்வங்களின் வழிபாடு உங்கள் கஷ்டங்களை போக்கும்.
தன்னடக்கத்துடன் பணியாற்றி முன்னேற துடிக்கும் மீன ராசி அன்பர்களே!விரைய சனியின் தாக்கத்தில் உள்ளீர்கள் . அதனால் முதல் ஆறு மாதங்கள் சற்றது நிதானமாக செயல்பட வேண்டும். ஜூனுக்கு பிறகு சனியின் தாக்கம் குறையும். தொழில் உத்தியோகத்தில் சற்று முன்னேற்றம் ஏற்படும்.உடல்நலம் சற்று பாதிக்கப்பட்டு சீரடையும் .சிலருக்கு பிரச்சனைகளோடு திருமணம் நடக்கும். தங்கள் குழந்தைகளை வழியில் சில முன்னேற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தாலும், சில தடைகள் ஏற்பட்டு முன்னேற்றம் தாமதமாகும். வாழ்க்கைத் துணைவரின் உடல்நலம் சற்று பாதிப்பு ஏற்பட்டாலும் ஆண்டு கடைசியில் சில லாபங்கள் ஏற்படும்.ஜனவரி முதல் ஏப்ரல் வரை சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும். மாமாவின் வர்க்கத்தில் செப்டம்பர் வரை உடல்நலம் மற்றும் வெளியே வட்டார பழக்கங்களில் கவனமுடன் இருக்க வேண்டும். பார்ட்னர்ஷிப் சில பிரச்சனைகள் நஷ்டங்களும் ஏற்படும் பார்ட்னர்ஷிப் முறிந்துவிடும் சூழ்நிலையும் உண்டாகும்.பிள்ளைகள் வாகனம் ஓட்டும்போதும் வெளி வட்டார பழக்க ,வழக்கங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பூர்விக சொத்துக்கள் பற்றி தற்பொழுது விவாதிக்க வேண்டாம். தந்தைக்கு ஜனவரி முதல் மார்ச் வரை சிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டு சீரடையும் .சிலருக்கு தகப்பனாரின் தாய் தந்தையரும் கண்டங்கள் ஏற்படும். இடம் விட்டு இடம் மாறக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சிலர் பழைய வீடுகளை புதுப்பிக்க கூடிய வாய்ப்பினை பெறுவார். திருநள்ளாறு, குச்சனூர் போன்ற தலங்களுக்கு சென்று வழிபடுவதோடு ஆஞ்சநேயர் ,விநாயகரை வணங்கி வந்தால் இன்னல்கள் குறையும்.