இலங்கை

அசோக ரன்வல இராஜினாமா; புதிய சபாநாயகர் தொடர்பில் வெளியான தகவல்!

Published

on

அசோக ரன்வல இராஜினாமா; புதிய சபாநாயகர் தொடர்பில் வெளியான தகவல்!

  அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், இராஜினாமா புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமென நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், அன்றைய தினம் புதிய சபாநாயகர் நியமனம் தொடர்பான வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

சபாநாயகர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக அசோக ரன்வெல நேற்று (13) அறிவித்த நிலையில் புதிய சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது.

இராஜினாமா கடிதத்தை சபாநாயகரால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடமோ அல்லது ஜனாதிபதியிடமோ வழங்க முடியும் என என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு கிடைத்த பின்னர் சபாநாயகரின் இராஜினாமா கடிதம் தொடர்பில் ஜனாதிபதி தீர்மானம் எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

சபாநாயகரின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டால், புதிய சபாநாயகரை மீண்டும் நாடாளுமன்றம் தெரிவு செய்ய வேண்டும் எனவும், பொதுச் சட்டத்தின் கீழ் வாக்களித்து அல்லது நியமனம் மூலம் புதிய சபாநாயகரை தெரிவு செய்ய முடியும் எனவும்  அவர்  மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version