இலங்கை

கடமைகளை பொறுப்பேற்கும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்

Published

on

கடமைகளை பொறுப்பேற்கும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தமது கடமையினை சற்றுமுன்னர் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

Advertisement

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று (13) காலை 08.45 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக உத்தியோகபூர்வமாகத் தமது கடமையினைப் பொறுப்பேற்றார்.

இந் நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன், மாவட்ட செயலாளரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் உடனிருந்தார்.

மேலும், கடமையேற்பு நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உள்ளகக் கணக்காய்வாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களும் உத்தியோகத்தர்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version