இந்தியா

பாடகி இசைவாணி குறித்து அவதூறு பரப்பும் கும்பல்? வெளியான திடுக்கிடும் தகவல்

Published

on

பாடகி இசைவாணி குறித்து அவதூறு பரப்பும் கும்பல்? வெளியான திடுக்கிடும் தகவல்

சென்னை ராயபுரத்தில் பிறந்து வளர்ந்தவர் கானா பாடகி இசைவாணி. இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். இயக்குனர் பா ரஞ்சித்தின் “கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” (casteless collective) இசைக்குழுவில் இணைந்து பல்வேறு பாடல்களை இவர் பாடியிருக்கிறார். பெண்ணடிமை, பெரியார் தத்துவம் போன்ற கருத்துக்களை உள்ளடக்கியது இவரது கானா பாடல்கள். வெளிநாடுகளிலும் பல இசை நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடி வருகிறார்.

Advertisement

இந்த நிலையில்தான் சமீபத்தில் இசைவாணி ஒரு மாபெரும் சர்ச்சையில் சிக்கினார். 2019ஆம் ஆண்டில் இசைவாணி பாடிய “I Am Sorry Ayyappa” பாடல் பெரும் சர்ச்சையாக வெடித்தது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கும் தரிசனம் என்பது போன்ற வரிகளால் இசைவாணி பாடிய அப்பாடலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இசைவாணியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

Also Read :
பிரபல நடிகரை கடத்தி 12 மணி நேரம் துன்புறுத்திய கும்பல்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

இதனிடையே தன்னைப் பற்றியும் தன் சாதியை பற்றியும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்படுவதாகச் சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் இசைவாணி புகார் அளித்துள்ளார். புகாரில் சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தன்னைப் பற்றி அவதூறு பரப்பப்படுவதாக இசைவாணி போலீசில் புகாரளித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version