சினிமா
பிக்பாஸ் எலிமினேஷனுக்கு பிறகு சாச்சனா சென்ற முதல் இடம்..? வைரல் போட்டோ
பிக்பாஸ் எலிமினேஷனுக்கு பிறகு சாச்சனா சென்ற முதல் இடம்..? வைரல் போட்டோ
மகாராஜா படத்தின் மூலம் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து பலரது மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை சாச்சனா. இவர் நடித்த ஒரு படத்தின் மூலமே மிகவும் பிரபலம் ஆனார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை சாச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் பங்கு பற்றினார். அதில் வரலாற்றில் முதல் தடவையாக 24 மணி நேரத்தில் வைக்கப்பட்ட எலிமினேஷனில் சிக்கி வெளியேறி இருந்தார். இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக காணப்பட்டது.எனினும் அவர் மூன்று நாட்கள் கழித்து மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார். அதுவரையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள சீக்ரெட் ரூமில் இருந்ததாக கூறப்பட்டது. ஆரம்பத்தில் இவருக்கு அமோக வரவேற்பு காணப்பட்டது. ஆனாலும் நாளடைவில் இவர் நடந்து கொள்ளும் விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்தது.இதைத் தொடர்ந்து இறுதியாக நடைபெற்ற டபுள் எலிமினேஷனில் சாச்சனாவும் எலிமினேட் ஆகி இருந்தார். சுமார் 60 நாட்கள் அவர் வீட்டில் இருந்ததற்கு அவருக்கு 12 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சாச்சனா முதன்முதலாக வட பழனி கோயிலுக்கு சென்றுள்ளார். இதன் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தின் ஸ்டோரில் வைத்துள்ளார். தற்போது குறித்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.