சினிமா

பிரபுதேவாவை காதலித்ததற்கு காரணம் இதுதானா?.. நயன்தாரா ஓபன் டாக்

Published

on

பிரபுதேவாவை காதலித்ததற்கு காரணம் இதுதானா?.. நயன்தாரா ஓபன் டாக்

இன்று தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. தற்போது இவர் ராக்காயி என்ற மிரட்டல் ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார்.சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக இன்றும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக வலம் வருகிறார்.நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவ்வப்போது பல சர்ச்சைகள் உலா வருவதை நம்மால் காண முடிகிறது. சமீபத்தில், கூட தனுஷ் – நயன்தாரா பிரச்சனை சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.அதை தொடர்ந்து, மூன்று குரங்குகள் குறித்து அவர் பேசிய விஷயமும் பேசும் பொருளாக மாறியது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தனியார் ஆங்கில யூடியூப் சேனல் ஒன்றுக்கு நயன்தாரா அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ” சினிமா துறையில் இரண்டாம் திருமணங்களை நிறைய பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு இதுபோன்று நடப்பது எல்லாம் தவறு என்று தோன்றியது இல்லை.அதற்கு முக்கிய காரணம் சினிமா துறை அப்படித்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இப்போது அதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், அப்போது அது என் நிலைப்பாடாக இருந்தது” என்று கூறியுள்ளார்.தற்போது, இந்த கருத்துக்கு ரசிகர்கள் நயன்தாரா பிரபுதேவா குறித்து தான் மறைமுகமாக பேசியுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version