இந்தியா

மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர் ஈவிகேஎஸ் : திருமாவளவன் இரங்கல்!

Published

on

மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர் ஈவிகேஎஸ் : திருமாவளவன் இரங்கல்!

மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த நவம்பர் 13ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ஈவிகே எஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி இன்று (டிசம்பர் 14) காலமானார்.

Advertisement

அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் பேரியக்கத்தின் சட்டமன்ற உறுப்பினரும் மேனாள் இந்திய ஒன்றிய அமைச்சருமான அண்ணன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவு பெருந்துயரத்தை அளிக்கிறது.
தனிப்பட்ட முறையில் என்மீது மிகுந்த பற்றுதலைக் கொண்டிருந்தவர். அவ்வப்போது தொடர்பு கொண்டு என்னை ஊக்கப்படுத்தியவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர்.

அவருடைய மறைவு தமிழக அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version