சினிமா

மனைவிகள் புரிஞ்சுக்கோங்க.. சீனு ராமசாமி விவாகரத்துக்கு காரணம் இதுதான்

Published

on

மனைவிகள் புரிஞ்சுக்கோங்க.. சீனு ராமசாமி விவாகரத்துக்கு காரணம் இதுதான்

சமீபத்தில் இயக்குனர் சீனு ராமசாமி-க்கு விவாகரத்து என்ற செய்தி வைரலாகி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது என்ன அடுத்தடுத்து இப்படி எல்லாரும் பிரியிறாங்க என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட சீனு ராமசாமி, “இருவரும் பிரிந்து அவரவர் பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளோம் ” என்று கூறியிருந்தார்.

பொதுவாக அழுகி போன பன் கிடைத்த்தாலே, 10 நாள் மெண்ணுவார் பயில்வான் ரங்கநாதன். இப்போ கேட்கவே வேண்டாம். தன் வீட்டில் சோறு பொங்கி தின்ன, அடுத்தவன் குடியை கெடுக்கும் வேலையை சிறப்பாக பார்த்து வருகிறார். இவருக்கு கன்டென்ட் கிடைக்கும் வகையில், அடுத்தடுத்த விவாகரத்து நடந்துகொண்டு இருக்கிறது.

Advertisement

அந்த வகையில் தற்போது சீனு ராமசாமி விவாகரத்து தொடர்பாக சில தகவல்களை கூறியுள்ளார். அதாவது மனைவிகளுக்கு அறிவுரை கூறியுள்ளார். “சினிமாவில் உள்ளவர்களுக்கு body demand இருக்கும். அதே நேரத்தில் அவர்களுக்கு தொழில் சார்ந்த நிறைய பிரச்சனைகள் இருக்கும். அதனால் பல நேரங்களில் குடும்பத்துடன் நேரம் செலவழிக்கமுடியாமல் போகும்..”

“சினிமா துறையில் இருப்பவர்களை மணந்த மனைவிகள் கொஞ்சம் இதை புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு நீங்கள் மட்டும் பிரச்சனை இல்லை.. ஏராளமான பிரச்சனைகள் உள்ளது..” என்று கூறியுள்ளார்.

இதை கேட்டு .. “ஆமா நீ யாரு? நீ என்ன அவங்க வீட்டு தோட்டகாரனா? கூட இருந்து பாத்த மாதிரி சொல்ற.. இதே ஒரு பொண்ணுக்கு விவாகரத்து ஆகி இருந்தா என்ன சொல்லி இருப்ப?”

Advertisement

“கள்ள தொடர்பு.. Adjustment-ன்னு சொல்லுப்ப.. ஒரு பொண்ணு இருக்கான்னு ஞாபகம் வச்சுகோ…” என்று காரி துப்பாத குறையாக திட்டி வருகிறார்கள் நெட்டிசன்கள். ஆனால் வெட்கம் என்றால் என்னவென்றே தெரியாத பயில்வான் பணம் சம்பாதிக்க நாக்கில் நரம்பில்லாமல் பேசுவார். அவர் இதையெல்லாம் கேட்டு திருந்தவா போகிறார்?..

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version