இந்தியா

மும்பை மத்திய வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்; விசாரணை தீவிரம்!

Published

on

மும்பை மத்திய வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்; விசாரணை தீவிரம்!

இந்திய ரிசர்வ் வங்கிக்கு நேற்றைய தினம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் குறித்து தீவிர விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டு வருவதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வங்கியின் அதிகாரபூர்வமான இணையத்தளத்துக்கு நேற்றைய தினம் ரஷ்ய மொழியில் மின்னஞ்சல் மூலம்   வெடிகுண்டு மிரட்டலொன்று  விடுக்கப்பட்டிருந்தது.

Advertisement

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக மும்பை பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

முன்னதாக நவம்பர் 16ஆம் திகதி, ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அழைத்தவர் ‘லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி’ என்று தன்னைக் கூறிக்கொண்டதாகவும் மிரட்டல் விடுப்பதற்கு முன் ஒரு பாடலைப் பாடியதாகவும் கூறப்படுகின்றது.

டெல்லியில் பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இதேவேளை  டெல்லியில் உள்ள ஆறு பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை (டிசம்பர் 13) மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அப்பள்ளிகளில் தீயணைப்புப் படை, காவல்துறை, வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினர்.

Advertisement

தீவிர சோதனைக்குப் பிறகு, சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் உறுதி செய்தனர்.

திங்கட்கிழமை காலை, குறைந்தது 40 டெல்லி பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. அதை அனுப்பியவர், பள்ளிக் கட்டடங்களுக்குள் வெடிகுண்டு வெடிப்பதைத் தடுக்க 30,000 தொகையைக் கோரினார்.

மிரட்டலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் அவை வெறும் புரளி என்பது தெரியவந்தது.

Advertisement

இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்கள், விமான நிலையங்களுக்கு இந்த ஆண்டு நவம்பர்வரை கிட்டத்தட்ட 1,000 போலி மிரட்டல்கள் வந்துள்ளன. இது 2023ஆம் ஆண்டைவிட கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version