இலங்கை

யாழ் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே தீவரமடைந்த முரண்பாடு

Published

on

யாழ் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே தீவரமடைந்த முரண்பாடு

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், குறித்த போராட்டமானது நேற்றையதினம் மீண்டும் ஆரம்பமாகி இன்று வரை நடைபெற்றது.

Advertisement

சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே இன்றையதினம் முரண்பாடு ஏற்பட்டது.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

Advertisement

அதன்பின்னர் நிலை சுமூகமானதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version