இலங்கை

யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம்; பரிதாபமாக உயிரிழந்த சிசு

Published

on

யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம்; பரிதாபமாக உயிரிழந்த சிசு

  தமிழகத்தில் யூடியூப் பார்த்து பிரசவம் செய்ததில் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே உள்ள பெரிய செங்கீரையில் வசித்து வருபவர் ராஜசேகர். இவரது மனைவி அபிராமி கர்ப்பமாக இருந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் குழந்தைபேறுகாலம் வந்ததும் மருத்துவமனைக்கு செல்லாமல், ராஜசேகரும் அவரின் தாயும் சேர்ந்து யூடியூப்பை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் குழந்தை இறந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அபிராமிக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், முதல் கர்ப்பத்தின் போது குழந்தை இறந்ததால் அலோபதி மருத்துவம் மீது நம்பிக்கையில்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இதற்காக 2வது கர்ப்பத்தை சுகாதாரத்துறையினரிடம் மறைத்துள்ளார்.

இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் முதல் குழந்தை உயிரிழந்ததால் மருத்துவமனிக்கு செல்லாது, இரண்டாவது குழந்தைக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த நிலையில் அக்குழந்தையும் உயிரிழந்துள்ளமை பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version