சினிமா
12 மணியானாலும் பார்த்துட்டு தான் போவோம்! இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு..!
12 மணியானாலும் பார்த்துட்டு தான் போவோம்! இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு..!
பிரபல நடிகர் சிம்பு பல தனது ரசிகர்களை இரவு நேரத்தில் சந்தித்து பேசிய வீடியோ டுவிட்டரில் வலம் வருகிறது. ரசிகர்களுக்கு சிம்பு எவ்வளவு மதிப்பளிக்கிறார் என்பதற்கிணங்க இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அருமையான படங்களினால் பலரது மனங்களை வென்றவர் நடிகர் சிலம்பரசன். இவருக்கெனவே ஏராளமா ரசிகர்கள் இருக்கும்பட்சத்தில் இரவு நேரத்தில் 12:00 மணியானாலும் சிம்புவை பார்க்காமல் போகமாட்டோம் என்று சிம்புவின் வீட்டிற்கு முன் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது இரவு நேரத்தில் அவர்களை சென்று சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதோடு ஆட்டோகிராப்பும் வழங்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இவர் இறுதியாக பத்து பல என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது கமலஹாசனின் தக் லைப் திரைப்படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.