இலங்கை
அடுத்த 24 மணிரேம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
அடுத்த 24 மணிரேம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கை வாழ் மக்களுக்கு அடுத்து வரக்கூடிய 24 மணிநேரம் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளை சுற்றி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அந்த அமைப்பு மெதுவாக உருவாகி வடமேற்கு நோக்கி நகரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் இரு தினங்களில் நாட்டின் வடபகுதிக்கு அருகில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வீசும் என்பதுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.