இலங்கை

அரச அதிகாரிகளை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்!

Published

on

அரச அதிகாரிகளை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்!

அரச அதிகாரிகளை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். அவர்களை அணுகுவதற்கு ஒரு முறை உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால், அரச அதிகாரிகள் தரக்குறைவாக நடத்தப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

அரச அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித்தரத்தில் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். கற்றறிந்துதான் அவர்கள் அந்தப் பதவிகளுக்கு வந்திருக்கிறார்கள். ஊடகவியலாளர்களுக்கும் எங்களை விட ஊடகத்துறையில் அனுபவம் கூடுதலாகவே இருக்கும். ஆகவே என்னைப் பொறுத்த வரைக்கும் நாங்கள் அவர்களை அணுகுவதற்கான முறை இருக்கிறது. 

எங்களுடைய கட்சி இதுவரை காலமும் அவ்வாறு தான் நடந்திருக்கிறது. தொடர்ந்தும் அந்த பொறுப்போடும் கண்ணியத்தோடும் அரச உத்தியோத்தர்களோடு அணுகிச் செயற்படுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர் அரச அதிகாரிகளை தரம் தாழ்ந்த சொற்களால் அவமானப்படுத்தியபோது சிறீதரன் அதனை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version