இந்தியா
“அரோகரா, நமச்சிவாயா கோஷம் முழங்க” – ராமநாதசுவாமி கோவிலில் சொக்கப்பனை தீபம்…
“அரோகரா, நமச்சிவாயா கோஷம் முழங்க” – ராமநாதசுவாமி கோவிலில் சொக்கப்பனை தீபம்…
ராமநாதசுவாமி கோவிலில் சொக்கப்பனை தீபம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு. பனைமரத்தில் ஒளிந்திருந்த திரிபுராசுரனை சிவபெருமான் வதம் செய்து அரோகரா கோஷத்துடன் விமரிசையாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை பௌர்ணமி நாளில் கிழக்கு கோபுர வாசலில் முன்பு சிவபெருமான் திரிபுராசுரனை வதம் செய்து பனைமரத்தினை கொளுத்தும் நிகழ்வு நடைபெறும்.
இந்நிலையில், இன்று கார்த்திகை மாத பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மூன்றாம் பிரகாரம் விளக்கின் ஒளியில் ஜொலித்தது. இதன்பின் ராமநாதசுவாமி – பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று, சுவாமி – அம்பாள் பிரியாவிடை பெற்று விநாயகர், முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுடன் கிழக்கு கோபுர வாசல் பகுதிக்கு வந்தனர்.
கிழக்கு கோபுர வாசல் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை முன்பு பூஜைகள் செய்து கோவிலின் குருக்கள் சுவாமி அம்பாளிடம் இருந்து தீபத்துடன் சென்று இரண்டு பனை மரத்திற்கு தீ வைத்து சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அரோகரா, நமச்சிவாயா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்து வெகு விமரிசையாக நடைபெற்றது.