சினிமா

அல்லு அர்ஜுன் கைது – ஆதரவு தெரிவித்த திரை பிரபலங்கள்

Published

on

அல்லு அர்ஜுன் கைது – ஆதரவு தெரிவித்த திரை பிரபலங்கள்

அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படம் பார்க்க சென்றபோது, தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து 50 ஆயிரம் பிணையுடன் அல்லு அர்ஜுனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து சிறையில் இருந்து ரிலீஸ் ஆன அல்லு அர்ஜுன் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.

இதனையடுத்து நடிகர்கள் ராணா டகுபதி, நாக சைதன்யா, உபேந்திர ராவ், விஜய் தேவரகொண்டா மற்றும் புஷ்பா இயக்குநர் சுகுமார் ஆகியோர் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து பேசி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா அல்லு அர்ஜூன் வீட்டிற்கு சென்றார். வீட்டிற்கு சென்ற விஜய் தேவரகொண்டா அல்லு அர்ஜூனை கட்டித்தழுவி ஆதரவு தெரிவித்தார்.

 தமிழ் இயக்குனரும் நயன்தாரா கணவருமான விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘இதை பார்க்க தான் காத்திருந்தேன்’ என அல்லு அர்ஜுனுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version