இலங்கை

இந்தியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேசப் போட்டியில் யாழ் மாணவர்கள் சாதனை

Published

on

இந்தியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேசப் போட்டியில் யாழ் மாணவர்கள் சாதனை

இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற சர்வதேச UCMAS போட்டியில் இலங்கையில் இருந்து சென்ற மாணவர்களில் அதிகூடிய சம்பியன்களைப் பெற்று யாழ்ப்பாணம் நகரத்துக்கான கிளை சாதனை படைத்துள்ளது.

இந்தப் போட்டியில் பல்வேறுபட்ட உலக நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டதுடன் இலங்கையில் பல பாகங்களில் இருந்தும் 103 மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement

இவர்களில் பல்வேறுபட்ட பிரிவுகளைச் சேர்ந்த 16 மாணவர்கள் சர்வதேச சம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில், யாழ்ப்பாணம் கிளையில் இருந்து 6 பேர் கலந்துகொண்டு அர்த்தனா பிரசாந்,

டெரிக் ஜோய் ஜெயந்தன், அஸ்விதா விக்னேஸ்வரன், சேர்ஜியஸ் இருதியராஜா ஆகிய நால்வரும் சாம்பியன்களாகவும், ரண்ணறப்பாக பவிரா கோபிலன், மானுசா கோபிலன் ஆகிய இருவரும் வென்றுள்ளமை குறிப்பிடதக்கது.

BRAINWAVE ACADEMY யின் மூலம் UCMAS, Robotics, English Speaking பாட நெறிகளை நடத்தி வருகின்ற ஆசிரியர் தயானா சந்துருவின் வழிகாட்டலில் ஆரம்பித்த மிகக் குறுகிய காலத்தில் National, International ரீதியாக இந்த நிறுவனம் சாதனை படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version