இலங்கை

இலங்கையில் இரண்டு தேர்தல்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்!

Published

on

இலங்கையில் இரண்டு தேர்தல்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்!

நாட்டில் 2025 ஆம் அண்டு ஏப்ரல் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், செப்டெம்பர் மாதம் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த ஜனாதிபதி அநுர குமார தலைமையிலான அரசாங்கம் திட்மிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

Advertisement

2025ல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலுக்கான திகதிகளை அரசு தீர்மானித்துள்ளது என்று நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களைக் கோரும் வகையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடத்தவும், 7 ஆண்டுகளுக்கும் மேலாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை செப்டெம்பர் மாதம் நடத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை விரைந்து முடிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது எனவும் கூறப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version