இந்தியா

சீனாவை சமாளிக்க மாஸ்டர் பிளான் போடும் இந்தியா..! ரஷ்யாவுடன் கையெழுத்தாகும் ஒப்பந்தம்

Published

on

சீனாவை சமாளிக்க மாஸ்டர் பிளான் போடும் இந்தியா..! ரஷ்யாவுடன் கையெழுத்தாகும் ஒப்பந்தம்

அரசு முறை பயணமாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அவரது உயர்மட்ட பாதுகாப்புக் குழுவினர் ரஷ்யா சென்றுள்ள நிலையில், நம்முடைய அண்டை நாடான சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ரஷ்யாவுடன் சுமார் 4 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement

இந்தியா – ரஷ்யா இடையிலான ஒரு பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ளதாகக் கூறப்படும் இந்த ஒப்பந்தம் இந்தியாவின் வான் பாதுகாப்பு உள்கட்டமைப்பிற்கு பெரிய ஊக்கத்தை அளிக்கக் கூடியது என்று கூறப்படுகிறது.

விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள் மற்றும் ரேடார்களைத் தயாரிப்பதற்கான சிறப்பு அமைப்பான ரஷ்யாவின் அல்மாஸ் – ஆன்டே கார்ப்பரேஷன் மூலம் தயாரிக்கப்பட்ட மேம்பட்ட ‘Voronezh’ சீரிஸ் ரேடார் தொடர்பாகவும் இரு தரப்பாலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. Voronezh ரேடார் என்பது 8,000 கிலோமீட்டருக்கும் அதிகமான ரேஞ்சை கொண்ட மிக நீண்ட தூர முன்னறிவிப்பு எச்சரிக்கை ரேடார் சிஸ்டம் ஆகும். இந்த ரேடாரானது பாலிஸ்டிக் ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் ஐசிபிஎம்கள் போன்ற அச்சுறுத்தல்களைத் திறம்பட கண்டறிந்து கண்காணிக்கும் திறன் கொண்டது.

Advertisement

ஒருவேளை இந்தியாவிற்கு இந்த ரேடார் சிஸ்டமை ரஷ்யா வழங்கினால் இந்த மேம்பட்ட ரேடார் அமைப்பு மூலம் சீனா, தெற்கு மற்றும் மத்திய ஆசியா மற்றும் பெரும்பாலான இந்தியப் பெருங்கடல் பகுதியில் எங்கிருந்து வரும் வான்வழி அச்சுறுத்தலையும் எளிதாகக் கண்டறிய முடியும். Voronezh ரேடாரால் ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட பொருட்களைக் கண்டறிய முடியும். இதன் ஒட்டுமொத்த வரம்பு 10,000 கிலோ மீட்டர்கள் வரை இருக்கும். இதன் வெர்டிகல் ரேஞ்ச் 8,000 கிமீ மற்றும் ஹரிசான்ட்டல் ரேஞ்ச் 6,000 கிமீக்கு மேல் உள்ளது. மேலும் Voronezh ரேடாரானது திருட்டுத்தனமாகச் சுற்றும் விமானங்களைக் கூட கண்காணிக்கக் கூடியது என ரஷ்யா கூறுகிறது.

ரஷ்யா டுடேயின் அறிக்கையின்படி, மாஸ்கோ – புதுடெல்லி இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் அல்மாஸ் – ஆன்டேயின் குழு ஒன்று இந்தியாவிற்கு வருகை தந்து, இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சாத்தியமான ஆஃப்செட் பார்ட்னர்களுடன் பேச்சு நடத்தியது. மற்றொரு அறிக்கையில், தி சண்டே கார்டியன் கூறி இருப்பதாவது ‘மேக் இன் இந்தியா’ முயற்சியின் கீழ், குறைந்தபட்சம் 60% ரேடார் சிஸ்டம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதற்கான திட்டம் இருப்பதாகவும், இதற்காக ஆஃப்செட் பார்ட்னர்கள் இந்தியாவிலேயே தேடப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியா – ரஷ்யா இடையே ஒப்பந்தம் போடப்பட்டால் இந்த அட்வான்ஸ்ட் ரேடார் சிஸ்டம் கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் அமைக்கப்படும். மேலும் இதற்காக இடம் ஒன்றும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சித்ரதுர்கா ஏற்கனவே இந்தியாவின் மிகவும் மேம்பட்ட மற்றும் மிக ரகசியமான பாதுகாப்பு மற்றும் விண்வெளி வசதிகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிடமிருந்து ரேடார் சிஸ்டம் கையகப்படுத்தப்பட்டால் அதிகரித்து வரும் பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவின் வான் பாதுகாப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version