இந்தியா

சென்னையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச்சடங்கு!

Published

on

சென்னையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச்சடங்கு!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் நேற்று (14) காலை காலமானார்.

உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை 10.12 அளவில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல், இன்று (15) இராமாபுரத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவை அடுத்து சத்தியமூர்த்தி பவனில் அரைக்கம்பத்தில் கட்சிக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

இதேவேளை அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version