இலங்கை

தனியார் துறையால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசித் தொகை அதிகரிப்பு

Published

on

தனியார் துறையால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசித் தொகை அதிகரிப்பு

தனியார் துறையினரால் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் அளவு 4,800 மெட்ரிக் தொன்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 9ஆம் திகதி முதல் நேற்று (14ஆம் திகதி) வரையான காலப்பகுதியில் இந்த அரிசி தொகை இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார்.

Advertisement

அதில் 3,000 மெற்றிக் தொன் நாட்டு அரிசியும், 1,800 மெட்ரிக் தொன் வெள்ளை அரிசியும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனத்தினால் முன்பதிவு செய்யப்பட்ட 52,000 மெற்றிக் தொன் அரிசியின் முதலாவது 5,200 மெற்றிக் தொன் அரிசி எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள சதொச மற்றும் கூட்டுறவு அங்காடி வலையமைப்பின் ஊடாக இந்த அரிசி விற்பனை செய்யப்படவுள்ளது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version