சினிமா

தனுஷ் – நயன்தாரா வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Published

on

தனுஷ் – நயன்தாரா வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

நயன்தாராவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘பியோண்ட் தி ஃபேரி டேல்’ என்கிற பெயரில் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ்-இல் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகள் தன் அனுமதியைப் பெறாமல் பயன்படுத்தப்பட்டதாக படத் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் சார்பில், ரூ.10 கோடி கேட்டு  வக்கீல் நோட்டீஸ் அனுப்பட்டது.

அது மட்டும் இல்லாமல், நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, ‘நானும் ரௌடி தான்’ படக்காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டார்.

Advertisement

மேலும், இந்த வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீது விசாரணையை ஜன.8ம் திகதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, தனது திருமண ஆவணப்படத்தில் நானும் ரௌடிதான் காட்சிகளைப் பயன்படுத்த நயன்தாரா, தனுஷிடம் அனுமதி கேட்ட நிலையில் அதற்கு 2 ஆண்டுகளாக அனுமதிக்காமல் இழுத்தடித்தார் என நயன்தாரா சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனுஷ் மீது குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version