சினிமா

‘தி கோட்’ திரைப்படம் வெளியாகி 100 நாட்கள்; சிறப்பு வீடியோ வெளியிட்ட படக்குழு..!!

Published

on

‘தி கோட்’ திரைப்படம் வெளியாகி 100 நாட்கள்; சிறப்பு வீடியோ வெளியிட்ட படக்குழு..!!

Advertisement

விஜய் 2 வேடங்களில் நடித்த தி கோட் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் விஜயுடன், வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, மைக் மோகன், சினேகா, லைலா, யோகி பாபு, பிரேம்ஜி ஆகியோர் நடித்திருந்தனர், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இப்படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார்.

திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்திய கோட் படம் அண்மையில் Netflix ஓடிடி தளத்தில் வெளியானது, அதிலும் டாப் 10 ட்ரெண்டிங் பட பட்டியலில் படம் முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது தி கோட் வெளியாகி 100 நாட்களை கடந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

Thank you 🙏 https://t.co/HjEUwwB3wZ

Advertisement

அந்த வீடியோவை வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த விடியோவை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து ;தி கோட்; படத்தின் 100வது நாள் என்ற ஹேஸ்டேகுடன் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version