சினிமா

தென்னிந்திய charlie chaplin படத்தில் நடிக்கும் தனுஷ்? செம சாய்ஸ்.. அப்போ Oscar Award உறுதி சாரே!

Published

on

தென்னிந்திய charlie chaplin படத்தில் நடிக்கும் தனுஷ்? செம சாய்ஸ்.. அப்போ Oscar Award உறுதி சாரே!

ஹாலிவுட் தமிழர் என அழைக்கப்படும் தனுஷ், இளையராஜா பயோபிக் பட த்தில் நடிப்பதை தொடர்ந்து, காமெடி லெஜண்ட் நடிகரின் பயோபிக்கிலும் நடிப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் தலைசிறந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபு. நடிகராக மட்டுமின்றி பாடகர், நாடகம், இசை, ஓவியம் என பன்முக கலைஞராக இருந்தார்.

Advertisement

1947 ல் தன அமராவதி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அவர். தன் திறமையால் விரைவிலேயே முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார்.

1950 கால கட்டத்தில் அப்போது பெரும் நட்சத்திரங்களாகவும் முன்ன்ணி நடிகராகவும் உருவாகிக் கொண்டனர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றோர்.

அவர்களின் படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து தன்னை நிரூபித்தார் சந்திரபாபு. தொடர்ந்து, சிவாஜியின் சபாஷ் மீனா படத்தில் இரண்டு வேடத்தில் நடித்து அசத்தினார்.

Advertisement

புதையல் படத்திலும் சிவாஜி நடிப்புக்கு ஈடுகொடுத்து நடித்திருந்தார் அவர். அன்றைய காலத்தில் மிக ஸ்டைலிஸான நடிகராகவும், பாடகராகவும் அறியப்பட்டதால் அவருக்கு ரசிகர்கள் அதிகம்.

அப்போது பல காமெடி நடிகர்கள் இருந்தாலும் கூட சந்திரபாபு தென்னிந்திய சார்லி சாப்ளின் என்றும் அழைக்கப்பட்டார்.

இவரது வாழ்க்கை வரலாறு படம் எப்போது எடுக்கப்படும்? என பலரும் கேள்வி எழுப்பினர். இதில், தனுஷ் சந்திரபாபுவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

Advertisement

குபேரா, இட்லிக் கடை, இளையராஜாவின் பயோபிக் ஆகிய படங்களை நிறைவு செய்த பின், சந்திரபாபுவின் பயோபிக் பட்த்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் எனவும், அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகள் பெற்ற தனுஷ், இப்படம் மூலம் ஆஸ்கர் விருது வாங்கும் அளவு நடிப்பு திறமையை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version