இலங்கை
நேருக்கு நேர் மோதிய பேருந்து – மோட்டார் சைக்கிள்! இளைஞனுக்கு நேர்ந்த அதிர்ச்சி!
நேருக்கு நேர் மோதிய பேருந்து – மோட்டார் சைக்கிள்! இளைஞனுக்கு நேர்ந்த அதிர்ச்சி!
மொனராகலை தனமல்வில – பராக்கிரம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனமல்வில – வெல்லவாய வீதியில் பயணித்த பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் ஹந்தபானாகல, வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது தனமல்வில மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.