இலங்கை

பாவனைக்குப் பொருத்தமற்ற, தரமற்ற அரிசி இறக்குமதி தொடர்பில் சர்ச்சை!

Published

on

பாவனைக்குப் பொருத்தமற்ற, தரமற்ற அரிசி இறக்குமதி தொடர்பில் சர்ச்சை!

நாட்டுக்குள் மனித பாவனைக்குப் பொருத்தமற்றதும், தரமற்றதுமான அரிசி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement

தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 75 ஆயிரம் கிலோவுக்கும் மேற்பட்ட அரிசியே தரமற்றது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இறக்குமதி அரிசிகள் சுங்கத் திணைக்களத்தில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னர் சுகாதார அமைச்சின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களால் நடத்தப்பட்ட பாதுகாப்புப் பரிசோதனையின்போதே அவை தரமற்ற அரிசிகள் என்று உறுதியாகியுள்ளதாக துறைசார் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்துத் தரமற்ற அரிசி இறக்குமதி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும், மேலதிக தகவல்கள் விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்குப் பகிரங்கப்படுத்தப்படும் என்றும் சுங்கத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version