பொழுதுபோக்கு

பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் மரணம்

Published

on

பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் மரணம்

பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சான் பிரான்சிஸ்கோவில் ‘தீவிரமான’ இதயம் தொடர்பான நோய்களுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 73.ஆங்கிலத்தில் படிக்க: Tabla maestro Zakir Hussain passes away at 73ஜாகிர் உசேன் மறைவுக்கு மத்திய அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர் இரங்கல் தெரிவித்தார், “உஸ்தாத் ஜாகிர் உசேனின் அசாதாரணமான தபேலா தேர்ச்சி இசை உலகில் காலத்தால் அழியாத பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது. அவரது கலைத்திறன் மூலம் அவரது வாழ்க்கையைத் தொட்ட அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது தாளங்கள் என்றென்றும் நம் இதயங்களில் எதிரொலிக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார். பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தி, “ஜாகிர் உசேன் காலமானார். பல உறுப்புகள் செயலிழந்துவிட்டன… அதுதான் எங்களுக்குக் கிடைத்த செய்தி. மிகவும் துயரமானது. இந்தியாவிற்கும் முழு உலகிற்கும் எவ்வளவு பெரிய இழப்பு”. என்று குறிப்பிட்டுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் விகாஸ் தாக்ரே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உஸ்தாத் ஜாகிர் உசேனின் தபேலாவில் அசாதாரண தேர்ச்சி இசை உலகில் காலத்தால் அழியாத பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது. அவரது கலைத்திறன் மூலம் அவரது வாழ்க்கையைத் தொட்ட அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது தாளங்கள் என்றென்றும் நம் இதயங்களில் எதிரொலிக்கும்.” எனறு இரங்கள் தெரிவித்துள்ளார்.பத்ம விபூஷன் விருது பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டதை பத்திரிகையாளர் பர்வைஸ் ஆலம் சமூக ஊடகங்களில் தெரிவித்தார். அதில் புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞரின் மைத்துனர் அயூப் ஆலியா, ஜாகிர் உசேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியதாகக் கூறினார். மேலும், அவர் எழுதினார், “உஸ்தாத் ஜாகிர் உசேன், தபேலா இசைக்கலைஞர், தாள வாத்தியக்காரர், இசையமைப்பாளர், முன்னாள் நடிகர், மற்றும் புகழ்பெற்ற தபலா கலைஞர் உஸ்தாத் அல்லா ரக்காவின் மகன். அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ மருத்துவமனையில் தீவிர நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் அவர், அவரது மைத்துனர் அயூப் அவுலியாவுக்கு தகவல் அளித்தார்… ஜாகிர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு ஜாகிரின் ஆதரவாளர்களை ஆலியா சாஹப் கேட்டுக் கொண்டுள்ளார்.” என்று குறிப்பிட்டிருந்தார்.ஆனால், பிரபல தபேலா இசைக்கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன் உடல்நலக் குறைவு காரணமாக, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்ட்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஜாகிர் உசேன் காலமானார். அவருக்கு வயது 73.மும்பையில் மார்ச் 9, 1951-ல் பிறந்த ஜாகிர் உசேன் இசை உலகில் பெரும் புகழ்பெற்றவர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். உஸ்தாத் ஜாகிர் உசேன் 1988-ல் பத்மஸ்ரீ, 2002-ல் பத்ம பூஷன் மற்றும் 2023-ல் பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றார். அவர் 2009-ல் தற்கால உலக இசை ஆல்பம் பிரிவில் கிராமி விருதையும் வென்றார். தி பீட்டில்ஸ் உட்பட பல மேற்கத்திய இசைக்கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியதற்காக அவர் நன்கு அறியப்பட்டவர்.ஜாகிர் உசேன் ஒரு புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர், அவரது தந்தை உஸ்தாத் அல்லா ரக்கா கான் அவரது காலத்தில் பிரபலமான தபேலா கலைஞர் ஆவார். தந்தையிடம் தபேலா வாசிக்கும் கலையை கற்றுக்கொண்டார். உஸ்தாத் ஜாகிர் உசேன் 7 வயதில் கச்சேரிகளில் தபேலா வாசிக்கத் தொடங்கினார். மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். ஜாகிர் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இசையில் முனைவர் பட்டம் பெற்றார். அவர் 1991-ல் பிளானட் டிரம்மிற்காக டிரம்மர் மிக்கி ஹார்ட்டுடன் இணைந்து பணியாற்றினார், இது கிராமி விருதை வென்றது. பிந்தைய ஆண்டுகளில், ஜாகிர் உசேன் பல படங்களின் ஒலிப்பதிவுகளில் பங்களித்தார். ஜாகீர் உசேன் 1991-ல் சங்கீத நாடக அகாடமி விருது பெற்றார். அட்லாண்டாவில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கின் தொடக்க விழாவிற்கு இசையமைத்த குழுவில் இவரும் ஒருவராக இருந்தார். 2016-ம் ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவால் வெள்ளை மாளிகைக்கு அனைத்து நட்சத்திர உலகளாவிய கச்சேரியில் பங்கேற்க அழைக்கப்பட்ட முதல் இந்திய இசைக்கலைஞர் ஆவார். இந்த ஆண்டு, 66-வது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில், ஒரே இரவில் 3 கோப்பைகளை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version