இலங்கை
யாழ் தையிட்டியில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே தீவரமடைந்த முரண்பாடு…!
யாழ் தையிட்டியில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே தீவரமடைந்த முரண்பாடு…!
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்ற போராட்டம் நேற்றுப் பதற்றத்தில் முடிந்துள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் பெருமளவான பொதுமக்களும் நேற்றுக் கலந்துகொண்டிருந்தனர். போராட்டத்தைக் கைவிடுமாறு கோரி பொதுமக்களுடன் பொலிஸார் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு போராட்டம் பதற்றத்தில் முடிந்துள்ளது.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பொலிஸாரின் அடாவடித்தனத்தைக் கண்டித்து வாக்குவாதப்பட்டதுடன், போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்தனர்.