தொழில்நுட்பம்

200 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் 5ஜி: ஜியோ புத்தாண்டு 2025 ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்

Published

on

200 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் 5ஜி: ஜியோ புத்தாண்டு 2025 ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்

புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஜியோ புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. புத்தாண்டை குறிக்கும் வகையில் ரூ.2025 விலையில் ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 200 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி 4ஜி டேட்டாவுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அன்லிமிடெட் காலிங் வசதி உடன் வருகிறது. அதோடு ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் இலவசமாக பெறலாம்.இதுதவிர Ajio மற்றும் Swiggy தளங்களிலும் சலுகைகள் வழங்கப்படுகிறது.  ஜியோவின் புத்தாண்டு வரவேற்பு திட்டம் மொத்தம் 500 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற 5ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த ஆஃபர் டிசம்பர் 11, 2024 முதல் ஜனவரி 11, 2025 வரை செல்லுபடியாகும். மேலும் இந்த திட்டத்தில் ரூ.500 அஜியோ கூப்பன்,  ஈஸ்மைட்ரிப் தளத்தில் விமான டிக்கெட்டுகளில் ரூ.1,500 கூப்பன் ஆகியவை பெறலாம். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version