இந்தியா

Aadhav Arjuna: ஆதவ் அர்ஜுனாவிடம் ஏதோ மறைமுக திட்டம்? – திருமாவளவன் பரபரப்பு!

Published

on

Aadhav Arjuna: ஆதவ் அர்ஜுனாவிடம் ஏதோ மறைமுக திட்டம்? – திருமாவளவன் பரபரப்பு!

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதவ் அர்ஜுனா குறித்து மேலும் பேசினார்.

Advertisement

அதில், “ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எங்கள் குறித்து கருத்து கூறுவதே தவறு. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது என்று எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை. எந்த அழுத்தத்தாலும் என்னை இணங்க வைக்க முடியாது. நான் அது சுதந்திரமாக எடுத்த முடிவுதான்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவர் தொடர்ந்து இப்படிப் பேசி வருவது அவருக்கு என்னவோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பதாக தெரிகிறது.

Advertisement

இடைநீக்கம் என்பது வெறும் கண் துடைப்பு அல்ல. கட்சி நடைமுறை விதிகளின்படி ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரத்தான். ஒரு கட்சி தான் ஆட்சியில் இருக்க வேண்டும், மாநிலங்களில் மற்ற கட்சிகள் ஆட்சியில் இருக்கக் கூடாது என்கிற நிலையில் தான் ஒரே நாடு ஒரே தேர்தலை பாஜக அரசு கொண்டுவர பார்க்கிறார்கள்.

#JUSTIN
எந்த அழுத்தமும் இல்லை; ஆதவ் அர்ஜூனா அவராகவே
யூகித்துக் கொண்டு பேசுகிறார் – திருமாவளவன்#AadhavArjuna #VCK #Thirumavalavan #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/RQhYMZMmfe

Advertisement

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். முதலமைச்சரிடம் இது தொடர்பாக முறையிட்டிருக்கிறேன்” என்று திருமாவளவன் கூறினார்.

முன்னதாக தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த ஆதவ் அர்ஜுனா, தன்னை விசிகவில் இருந்து இடைநீக்கப்பட்டதன் பின்னணியில் திமுக அழுத்தம் இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்தப் பேச்சு குறித்தே திருமாவளவன் பேட்டியளித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version