இந்தியா

LK Advani | எல்.கே.அத்வானிக்கு திடீர் உடலநலக்குறைவு : டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

Published

on

LK Advani | எல்.கே.அத்வானிக்கு திடீர் உடலநலக்குறைவு : டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

Advertisement

அண்மையில் தனது 97 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய அத்வானிக்கு, கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவுக்கு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே, டெல்லி அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஒரிரூ நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று இரவு திடீரென அவருக்கு உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது வரை 4 ஆவது முறையாக அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version