விளையாட்டு

MUM vs MP Final Live Score: சாம்பியன் பட்டத்தை வாகை சூடப் போவது யார்? டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த மும்பை

Published

on

MUM vs MP Final Live Score: சாம்பியன் பட்டத்தை வாகை சூடப் போவது யார்? டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த மும்பை

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த 17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், 3 முறை சாம்பியனான தமிழகம், பெங்கால், பரோடா உள்பட 38 அணிகள் களமாடின. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. இந்த தொடருக்கான அரைஇறுதி போட்டிகள் பெங்களுருவில் நடைபெற்ற நிலையில், பரோடாவை மும்பை அணியும், டெல்லியை மத்திய பிரதேசம் அணியும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. இந்த நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பெங்களுருவில் அரங்கேறுகிறது. மாலை 4:30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி ரஜத் படிதார் தலைமையிலான மத்தியப் பிரதேசம் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ஒருமுறை சாம்பியனான மும்பை, 2-வது முறையாக பட்டத்தை வாகை சூட ஆர்வமாக இருக்கும். அதேநேரத்தில், இதுவரை பட்டத்தை வெல்லாத மத்தியப் பிரதேசம் முதல் முறை வென்று சாதனை படைக்க காத்திருக்கிறது. மும்பை அணிக்காக தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ரஹானே இந்த தொடரில் 5 அரைசதங்களை விளாசி 432 ரன்களை குவித்துள்ளார். இதேபோல், ரஜத் படிதாரும் 347 ரன்களை குவித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே, சம பலம் கொண்ட இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில், இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.இரு அணி வீரர்கள் பட்டியல்: மும்பை அணி: பிருத்வி ஷா, அஜிங்க்யா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஹர்திக் தாமோர் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், தனுஷ் கோட்டியான், மோகித் அவஸ்தி, அதர்வா அன்கோலேகர், ஜெய் கோகுல் பிஸ்டா, ரோஸ்டன் லாட், ஷம்ஸ் முலானி, ஆகாஷ் ஆனந்த், சாய்ராஜ் பாட்டீல், அங்கிரிஷ் ரகுவன்ஷி, எம் ஜுனேத் கான், ஹிமான்ஷு சிங்மத்தியப் பிரதேச அணி: அர்பித் கவுட், ஹர்ஷ் கவ்லி (விக்கெட் கீப்பர்), சுப்ரான்சு சேனாபதி, ஹர்பிரீத் சிங் பாட்டியா, ரஜத் படிதார் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், திரிபுரேஷ் சிங், ராகுல் பாதம், குமார் கார்த்திகேயா, அவேஷ் கான், சிவம் சுக்லா, விகாஸ் சர்மா, அனிகேத் வர்மா, கமல் திரிபாதி, அர்ஷத் கான், குல்வந்த் கெஜ்ரோலியா, அபிஷேக் பதக், பங்கஜ் சோத்மல் சர்மா. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version