இந்தியா
TN heavy Rain Alert: அடுத்த டார்கெட் இந்த தீவு மாவட்டம் தான்..? அந்தமானில் உருவாகும் புதிய காற்று சுழற்சி…
TN heavy Rain Alert: அடுத்த டார்கெட் இந்த தீவு மாவட்டம் தான்..? அந்தமானில் உருவாகும் புதிய காற்று சுழற்சி…
ராமநாதபுரத்தில் மழைக்கான வாய்ப்பு என்ன..!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘ஃபெஞ்சி’ புயலுக்குப் பின் வெயில் அடித்து வந்த நிலையில், 10 நாட்கள் கழித்து கடந்த வியாழக்கிழமை கனமழை பெய்தது. இதன்பின் இரண்டு நாட்களாக அவ்வப்போது வெயில் அடித்தும், மிதமான மழை பெய்தும் வருகிறது. தற்போதுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வருவதால் மழை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சியானது உருவாகி உள்ளது. இச்சுழற்சி வலுப்பெற்று டிசம்பர் 17-ம் தேதி இலங்கை மற்றும் தமிழக கடற்பகுதியை நோக்கி நகரும். இந்தப் புதிய காற்றழுத்த சுழற்சியால் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து தமிழக கடற்கரையை நெருங்க நெருங்க ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும், அவ்வப்போது வெயில் அடித்து சீரான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.