இந்தியா

அமுதா ஐஏஎஸ் உட்பட ஐந்து பேருக்கு பதவி உயர்வு.. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

Published

on

அமுதா ஐஏஎஸ் உட்பட ஐந்து பேருக்கு பதவி உயர்வு.. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் அமுதா ஐஏஎஸ் உள்ளிட்ட 5 அதிகாரிகளுக்கு, கூடுதல் தலைமைச் செயலாளர்களாக அந்தஸ்து உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

1994ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் சேர்ந்த அதிகாரிகள், தமிழ்நாட்டில் முதன்மைச் செயலாளர்களாக உள்ளனர். இவர்களில் 5 பேருக்கு கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அரசாணையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் அமுதாவிற்கு கூடுதல் தலைமைச் செயலாளராக அந்தஸ்து உயர்வு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை முதன்மைச் செயலாளர் அதுல் ஆனந்த், மத்திய அயல் பணியில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சுதீப் ஜெயின் ஆகியோரும் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக அந்தஸ்து உயர்வு பெற்றுள்ளனர்.

Advertisement

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் அபூர்வா ஆகியோருக்கும் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக அந்தஸ்து உயர்த்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version