இந்தியா

ஆவின் அம்பத்தூர் பண்ணைக்கு ரூ.5.10 கோடி அபராதம்: எதற்காக?

Published

on

ஆவின் அம்பத்தூர் பண்ணைக்கு ரூ.5.10 கோடி அபராதம்: எதற்காக?

அனுமதி அளவைவிட அதிகமாக பால் உற்பத்தி செய்தது, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாதது ஆகியவற்றுக்காக, ஆவின் அம்பத்தூர் பால் பண்ணைக்கு, 5.10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை உள்ளிட்ட தொழிற்சாலை கழிவுகளால், சென்னை கொரட்டூர் ஏரி மாசடைந்து வருவதை தடுக்க உத்தரவிடக்கோரி, பசுமை தீர்ப்பாயத்தில், ‘கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம்’ மனு தாக்கல் செய்தது.

Advertisement

அதைத் தொடர்ந்து, ‘சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கொரட்டூர் ஏரியில் விடப்படுவதை, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும், நீர்வளத்துறையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை, அனுமதி அளவைவிட அதிகமாக, 3.75 லட்சம் லிட்டர் பாலை உற்பத்தி செய்கிறது.

Advertisement

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் செயல்படவில்லை. இதனால், பண்ணையில் இருந்து அதிக அளவு கழிவுநீர் வெளியேறி, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, அம்பத்தூர் ஆவின் பால் பண்ணைக்கு, 5.10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது’ என்றார்.

அப்போது, தமிழக அரசு வழக்கறிஞர், அபராதத் தொகை மிக அதிகமாக இருப்பதாக தெரிவித்தார்.

Advertisement

அதைத் தொடர்ந்து, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், ‘இது தொடர்பாக ஆவின் நிறுவனமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, டிசம்பர் 16-ம் தேதி (இன்று) தள்ளிவைத்தனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version