இந்தியா

இளையராஜாவை அவமானப்படுத்தி இன்புறுவது ஏன்?: நாராயணன் திருப்பதி கேள்வி!

Published

on

இளையராஜாவை அவமானப்படுத்தி இன்புறுவது ஏன்?: நாராயணன் திருப்பதி கேள்வி!

இளையராஜாவை அவமானப்படுத்தி இன்புறுவது ஏன் என்று பாஜகவைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் நேற்று, ஆண்டாள் ரெங்கமன்னரை தரிசனம் செய்ய சென்ற ஜீயர்களுடன், இசையமைப்பாளர் இளையராஜாவும் அர்த்த மண்டபத்திற்குள் நுழைய முயன்றார். அப்போது ஜியர்கள் இளையராஜாவை அர்த்த மண்டபத்திற்கு வெளியே நிற்குமாறு கூறி தடுத்து நிறுத்தினர்.

Advertisement

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

அர்த்த மண்டபம் என்பது கருவறை போன்றது. இத்திருக்கோயில் மரபு படியும், பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை என்று செயல் அலுவலர் தெரிவித்தார் என அறநிலையத் துறை தெரிவித்தது.

இந்நிலையில் இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில், “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

Advertisement

இந்த பதிவை டேக் செய்த பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதில், “அடப் பாவிகளா! இப்படி ஒரு வதந்தியை பரப்பி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் திராவிட மாடல்களே, ஊடக பொய்யர்களே, பரபரப்பு செய்திக்காக ஜாதி துவேஷம் செய்து அலையும் ஓநாய்களே, ஒப்பற்ற மனிதனை நோகடித்து விட்ட ஹிந்து விரோத தீய சக்திகளே , இனியும் உங்கள் கேவலமான செய்கைகளை நிறுத்திக்கொள்வீர்களா? வேங்கை வயலில் நடந்த வெட்ககேட்டை கண்டிக்க துப்பில்லாத துரோகிகளே, இளையராஜா என்பவரை அவமானப்படுத்தி இன்புறுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

போலீஸ்காரருக்கே இந்த நிலையா? – பெங்களூருவில் அடுத்த சம்பவம்!

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version