இலங்கை

கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்பனை செய்யாவிட்டால் 07 இலட்சம் வரை அபராதம் விதிக்க தீர்மானம்!

Published

on

கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்பனை செய்யாவிட்டால் 07 இலட்சம் வரை அபராதம் விதிக்க தீர்மானம்!

இலங்கையில் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாதவர்களுக்கு 07 இலட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

பண்டிகைக் காலத்தில் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசி விற்பனை செய்யாமை தொடர்பில் 342 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Advertisement

 கடந்த 17ஆம் திகதி முதல் இன்று (16) வரை இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அதிகார சபையின் தலைவர்  ஹேமந்த சமரகோன் குறிப்பிட்டார்.

இது தொடர்பான 6 சோதனைகள் தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்புகள் கிடைத்துள்ளதுடன், இதன் மூலம் 7 ​​இலட்சம் ரூபா தண்டப்பணமாக அறவிடப்படுவதற்கான தீர்மானங்கள் பெறப்பட்டுள்ளன.

 ஏனைய சோதனைகள் தொடர்பாகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற தீர்ப்புகள் எடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version