இந்தியா
கிச்சன் கீர்த்தனா : வல்லாரைச் சட்னி
கிச்சன் கீர்த்தனா : வல்லாரைச் சட்னி
காலை சிற்றுண்டிக்கு இட்லியோ, தோசையோ செய்து விட்டாலும், அதற்குத் தொட்டுக்கொள்ள என்ன செய்வது என்பதுதான் பெரும்பாலான இல்லத்தரசிகளின் பிரதான பிரச்சினையாக இருக்கும். அதற்கான தீர்வாக இந்த வல்லாரைச் சட்னி உதவும். வல்லாரையில் இரும்பு, சுண்ணாம்புச் சத்துகளும், வைட்டமின் ஏ, சி மற்றும் தாது உப்புகளும் நிறைந்துள்ளதால் அனைவருக்கும் ஏற்றதாக அமையும்.
கடலைப்பருப்பு – 60 கிராம்
கறுப்பு உளுந்து – 60 கிராம்
காய்ந்த மிளகாய் – 4 – 6
தேங்காய் – அரை மூடி (துருவவும்)
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – கால் இன்ச் துண்டு
கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு
எண்ணெய் – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு
வல்லாரைக்கீரை – ஒரு கட்டு (நறுக்கவும்)
தக்காளி – ஒன்று (நறுக்கவும்)
வாணலியில் சிறிது சிறிதாக எண்ணெய்விட்டு சூடானதும் முதலில் குறிப்பிட்டுள்ள எல்லா தேவையான பொருட்களையும் தனித்தனியாக வதக்கி, பொன்னிறமாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு சூடு ஆறியதும், அவற்றைத் தண்ணீர்விடாமல், மிகவும் நைஸாக இல்லாமல்… அதாவது, சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைத் தாளித்து, அரைத்துவைத்துள்ள இன்ஸ்டன்ட் சட்னி மிக்ஸில் சேர்த்துக் கலக்கவும். இதை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு மூடி, ஃப்ரீசரில் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.
வல்லாரைக்கீரையையும் தக்காளியையும் சிறிதளவு எண்ணெயில் லேசாக வதக்கி இன்ஸ்டன்ட் மிக்ஸ் உடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். வல்லாரைச் சட்னி நிமிடங்களில் தயார்.
குறிப்பு: வல்லாரைக்கீரையைச் சமைக்கும்போது புளி சேர்த்தால், அதன் பலன் முழுமையாகக் கிடைக்காது.