சினிமா

சமந்தா, தமன்னாவை தொடர்ந்து நயன்தாரா.. முன்னணி நடிகருடன் குத்தாட்டம்

Published

on

சமந்தா, தமன்னாவை தொடர்ந்து நயன்தாரா.. முன்னணி நடிகருடன் குத்தாட்டம்

முன்னணி மற்றும் சென்சேஷனலான நடிகைகள் சிறப்பு பாடலுக்கு நடனமாடுவது தற்போது இயல்பான ஒரு விஷயமாக மாறி வருகிறது. புஷ்பா 1 படத்தில் சமந்தாவின் சிறப்பு நடனம் வெகுவாக ரசிகர்களால் பேசப்பட்டது.அதை தொடர்ந்து, ஜெயிலர் படத்தில் தமன்னா, சமீபத்தில் வெளிவந்த புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலா என இவர்களின் நடனம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வைரலானது.இந்நிலையில், தற்போது நடிகை நயன்தாராவும் ஒரு சிறப்பு பாடலுக்கு நடமாடவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.அதாவது, பிரபாஸ் நடிப்பில் ஹாரர் கதைக்களத்தில் உருவாகி வரும் ராஜாசாப் படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்கு பிரபாஸ் உடன் இணைந்து நயன்தாரா நடமாடவிருக்கிறாராம். ஆனால், இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை. இதற்கு முன்பு நயன்தாரா ‘சிவாஜி, எதிர்நீச்சல்’ ஆகிய படங்களில் சிறப்பு பாடலுக்கு நடனமாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version