இந்தியா

டாப் 10 நியூஸ் : உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி முதல் மோடி – இலங்கை அதிபர் சந்திப்பு வரை!

Published

on

டாப் 10 நியூஸ் : உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி முதல் மோடி – இலங்கை அதிபர் சந்திப்பு வரை!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (டிசம்பர் 16) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது என்றும், அடுத்த 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில், தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக்க நேற்று இந்தியா வந்தடைந்த நிலையில், இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

Advertisement

புதுச்சேரி அரசின் வரவு செலவினங்களை, ஏனாமில் மத்திய தணிக்கை குழு இன்று ஆய்வு செய்கிறது.

எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருவதால் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா நாளை தாக்கல் இல்லை என்று மக்களவை செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தமிழக எம்.எல்.ஏக்கள் பங்கேற்க உள்ள இந்தியா -வியட்நாம் மக்கள் நட்புறவு திருவிழா வியட்நாமில் இன்று முதல் 21ம் தேதி வரை நடக்கிறது.

Advertisement

திருவண்ணாமலை தீபத்திருவிழா பாதுகாப்பிற்கு வருகைதரும் காவலர்கள் குறிப்பிட்ட பள்ளிகளில் தங்கவிருப்பதால் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் மழை பொழிவு முற்றிலும் நின்றுள்ள நிலையில் இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

தென்காசி நகராட்சிக்கு குடிநீர் வழங்கிவரும் அம்பாசமுத்திரம் ஊர்க்காடு தலைமை நீரேற்று நிலையத்திலுள்ள நீர் உறிஞ்சும் கிணறுகள் வெள்ளத்தில் மூழ்கி மோட்டார் பம்புகள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளதால் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் இருக்காது என ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் இன்று இந்தியா திரும்புகிறார்.

Advertisement

காபா மைதானத்தில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்துள்ளது. இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதால், இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version