இந்தியா
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் விநியோக விவகாரம்: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் விநியோக விவகாரம்: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!
திருப்பதி தேவஸ்தானத்திற்கு பிரசாதம் தயாரிக்க கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது, விலங்கு கொழுப்பு கலந்த நெய் விநியோகம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ அதிகாரிகள், மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவை நியமனம் செய்து விசாரிக்க உத்தரவிட்டது.
அதனடிப்படையில், நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்ற சிறப்பு அதிகாரிகள் குழு தீவிர விசாரணை மேற்கொண்டது.
தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக நெய் இருப்பு வைக்கும் கிடங்கு, பூந்தி தயாரிப்பு மையம் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது தொடர்பான பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.